ஏலகிரி மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஊராட்சி மன்றம் சார்பில் நடந்தது ஏராளமானோர் பங்கேற்றனர்
ஏலகிரி மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏலகிரி மலை ரோட்டரி கிளப் மற்றும் தருமபுரி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏலகிரி ஊராட்சி மன்றம் சார்பில் நடந்தது.

இம்முகாமிற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் அத்தனாவூர், நிலாவூர், மங்களம், உள்ளிட்ட ஏலகிரி மலை வாழ் மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

இம்முகாமில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com