போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

உரிமையாளர் கைது போலீசார் சோதனையில் சிக்கினார்
போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார்பேட்டை சந்தைக் கோடியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 58) என்பவரது கடையில் போலீசார் சந் தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற் பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த னர். மேலும் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அலு வலர்களுக்கு தகவல்தெரிவிக் கப்பட்டு வருவாய் ஆய்வா ளர் ரவிமாராஜன் உள்ளிட்ட அலுவலர்களால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com