திருப்பத்தூரில் தி.மு.க. அமைதி ஊர்வலம்

கருணாநிதி நினைவு நாளையொட்டி நடந்தது 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. உடன் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் உள்ளனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. உடன் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் உள்ளனர்.
Published on

திருப்பத்தூர்:

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் க.தேவராஜ் எம்எல்ஏ அமைதி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் எம்எல்ஏக்கள் நல்லதம்பி வில்வநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் கே ஆர் சூர்யகுமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமுருகன், சத்யா சதீஷ்குமார், உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமாேனா கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com