search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் ஹெல்மெட் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு
    X

    ஏலகிரி மலையில் ஹெல்மெட் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு

    • பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மெட் அணிய அறிவுரை
    • கடந்த 2 நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மேலும் ஏலகிரி மலை சாலையானது அபாயகரமான 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதனால் வாகனங்களில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏலகிரி மலை போலீசார் மலை சாலையில் வாகனம் ஓட்டுவது குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வார விடுமுறையான கடந்த 2 நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்.

    மேலும் நேற்று காலை சுற்றுலாவிற்கு வந்தவர்களுக்கும் சுற்றுலா முடித்து சொந்த ஊர் திரும்ப அவர்களுக்கும் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் சார்பில் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து தனியார் மோட்டார் நிறுவனத்திலிருந்து சுற்றுலாவிற்கு வந்த நபர்கள் தலைக்கவசம் மற்றும் முழு பாதுகாப்பு ஆடை அணிந்து வந்தவர்களை முன்னுதாரணம் காட்டி பைக்கில் நேற்று சுற்றுலாவுக்கு வந்த இளைஞர்களுக்கு போலீசார், உடல் உறுப்பை மாற்றிவிடலாம். ஆனால் மெக்கானிசமான மண்டை உடைந்தால் மாற்ற முடியாது. எனவே பாதுகாப்பான பயணத்திற்கு தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும் ஹெல்மெட், போதைப் பொருள் தடுப்பு, போக்சோ சட்டம், சைபர் குற்றங்கள், ஹெல்லைன் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட காவல் உதவி ஆப்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×