என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற முதியவர் கைது
- 11 லிட்டர் பறிமுதல்
- திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவரிடமிருந்து கள்ள சாராயம் பறிமுதல் செய்தனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள சாராயம் மது பாட்டில்கள் கஞ்சா போன்றவை விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நாட்டறம்பள்ளி போலிஷ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பச்சூர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக நாட்டறம்பள்ளி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பச்சூர் அருகே சாமு கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (வயது 56) இவர் தனது வீட்டின் பின்புறத்தில் மறைவாக வைத்து கள்ள சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார் இவர்டமிருந்து 11 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்தனர்.
மேலும் நாட்டறம்பள்ளி போலீசார் சிவராஜ் கைது செய்து அவரிடமிருந்து இருந்து 11 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து அளித்தனர் இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலிசார் சிவராஜ் மீது வழக்கு பதிவு கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






