என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் கைது
- 450 கிலோ பறிமுதல்
- கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
1-வது பிளாட்பாரத்தில் 3 பெண்கள் 30 மூட்டைகளில் ரேசன் அரிசியை ரெயிலில் கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்து இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் ஜோலார்பேட்டையில் இருந்து கர்நாடகாவிற்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்த இருந்ததாக தெரிவித்தனர்.
இதைய டுத்துஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 48 ), மலை அடிவாரம் அம்மு (38), சோமநாயக்கன்பட்டி சரசு (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






