திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்த 2 பேர் கைது

போலீசார் சோதனையில் சிக்கினர் 12 மூட்டைகள் பறிமுதல்
திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்த 2 பேர் கைது
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உமராபாத் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தினர்.

அங்கிருந்து 12 மூட்டை குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதையடுத்து கடைகாரரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த எஸ்பி தனிப்படை போலீசார் உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து ஆம்பூர் கஸ்பா பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com