

நெல்லை:
பாளையில் நேற்று இரவு தி.மு.க. பிரமுகர் அபே மணி என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதை அறிந்த நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகஷங்கர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட அபே மணியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும் கொலையில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கொலை செய்யப்பட்ட அபே மணியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.