

களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ஜெ.ஜெ.நகரில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக மேல தேவநல்லூர், வேலவன்குடியிருப்பை சேர்ந்த நாராயணன் மகன் அய்யப்பன் (வயது 29) அதிவேகமாகவும், கவன குறைவாகவும், முரட்டுத்தன மாகவும் பைக்கை ஓட்டி வந்தார்.
இதைப்பார்த்த போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் மது அருந்திய போதையில் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.