ஏர்வாடியில் வீட்டிற்குள் புகுந்த மரநாய் குட்டிகள்

ஏர்வாடியில் வீட்டுக்குள் புகுந்த மரநாய் குட்டிகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
வீட்டிற்குள் புகுந்த மரநாய் குட்டிகள்
வீட்டிற்குள் புகுந்த மரநாய் குட்டிகள்
Published on

ஏர்வாடி:

ஏர்வாடி லெப்பை வளவு வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று திடீரென  2 மரநாய் குட்டிகள் புகுந்து வீட்டு அலமாரியில் இருந்த மளிகை பொருட்களை சேதப்படுத்தியுள்ளன. 

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெற்கு கிளை செயலாளர் சாம்சஹாப்தீன் வீட்டிற்குள் புகுந்த மரநாய் குட்டிகளை சிறிய வலை பின்னல் கூண்டில் லாவகமாக பிடித்துள்ளார். 

அதன் பின்பு வனத்துறையினர் வந்து மரநாய் குட்டிகளை அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டு சென்றனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, கடந்த வடகிழக்கு பருவ மழையால் வந்த வெள்ளத்தில் இந்த குட்டிகள் அடித்து வரப்பட்டிருக்கலாம்  என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com