தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் வள்ளியூர் அணிக்கு தங்கப்பதக்கம்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் வள்ளியூர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
இரட்டையர் பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற வள்ளியூர் பிரியா கவின்வேந்தன், நாகர்கோவில் போன்ஷியா.
இரட்டையர் பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற வள்ளியூர் பிரியா கவின்வேந்தன், நாகர்கோவில் போன்ஷியா.
Published on

வள்ளியூர்:

திருவனந்தபுரத்தில் கேரளா இறகுபந்து அகாடமி சார்பில் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 4-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் இறகுபந்து போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில் தேசிய அளவிலான அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.

இரட்டையர் பிரிவினருக்கான இறுதி போட்டியில் வள்ளியூர் எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியும் அசாம் மாநில அணியும் மோதியது. எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியில் அதன் கோச்சர் பிரியா கவின்வேந்தன் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த போன்ஷியா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர்.

இந்த அணி அசாம் அணியை தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  மேலும் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரியா கவின்வேந்தன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

 வெற்றி பெற்ற வீராங்கனைகளை வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சங்கரவெங்கடேசன், அரசு மருத்துவர் கவிதா சங்கரவெங்கடேசன், வழக்குரைஞர்கள் கல்யாணகுமார், ராஜஜெகன், தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன், புஷ்பராஜ், மேக்ரோ ஐ.டி.இ. தாளாளர் பொன்தங்கதுரை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com