பாளையில் வியாபாரி திடீர் சாவு

பாளை குலவணிகர்புரத்தை அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த மாட்டுத்தீவன வியாபாரி திடீரென இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நாகர்கோவில் கோட்டாறு செட்டித்தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி (56). இவர் பாளை குலவணிகர்புரத்தை அடுத்த வீரமாணிக்கபுரம் குறுக்குத் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து மாட்டுத்தீவன வியாபாரம் செய்து வந்தார். 

நேற்று மாலை சுடலையாண்டி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது சுடலையாண்டி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com