

நெல்லை:
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் பாளை கே.டி.சி. நகரில் உள்ள போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நலச்சங்க மாநில குழு உறுப்பினர் சிவதானுதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வு பெற்ற பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும்.
2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்காமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திடீரென அவர்கள் திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.