

நெல்லை:
நெல்லை மாவட்ட உதவி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த நெல்லை, தென்காசி மாவட் டங்களுக்குள் இடமாறு தல்களுக்கான கலந்தாய்வில் 42 முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு நடந்தது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இணையதள சர்வர் கோளாறு காரணமாக பிற்பகல் வரை பணிகள் நடைபெறவில்லை. அதன்பின்னர் கலந்தாய்வு நடைபெற்றது.
வருகிற 7-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன்படி காலையில் மாவட்டங்களுக்குள்ளேயும், பிற்பகலில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் கலந்தாய்வு நடக்கிறது.