திசையன்விளையில் பெண் தபால் ஊழியர் தற்கொலை

திசையன்விளையில் ெபண் தபால் ஊழியர் தற்கொலை செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருண்முத்து அனுஷா(வயது 23).

இவர் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட அனுஷா, நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்தார்.

பின்னர் வீட்டில் மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு திசையன்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அனுஷா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com