பணகுடி அருகே வீடு புகுந்து நகை கொள்ளை

பணகுடி அருகே வீடு புகுந்து நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் பீட்டர் பாரத் (வயது 49). இவரது தாயார் ராணி வடக்கன்குளம் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் அவர் வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று அவரது மற்றொரு மகள் வீட்டின் முன்பகுதியை சுத்தம் செய்வதற்காக சென்றார்.அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது.

இதுகுறித்து அவர் பீட்டர் பாரத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com