தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.
தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.
Published on

நெல்லை:

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  

குமரி மாவட்டத்தில் நடந்த இந்த போட்டியில் 18 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட அமெச்சூர் சிலம்பாட்ட கழகம் சார்பில் 114 வீரர்கள் இந்த சிலம்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் 95 பதக்கங்களை அள்ளினர்.

மொத்தம் 1,260 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் நெல்லை மாவட்ட வீரர்கள் 95 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  

சுமார் 224 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளுக்காக நெல்லை மாவட்ட வீரர்களை தயார் செய்யும் பணியில் சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் கண்ணன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com