கோப்புப்படம்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே தொழிலாளி மர்மச்சாவு
நெல்லை அருகே தொழிலாளி மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை, மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் லாசர் (வயது 61), கூலித்தொழிலாளி. இவரது மனைவி விக்டோரியா (47).
கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.விக்டோரியா,
தனது மகன்களுடன் அடுத்த தெருவில் தனியாக வசித்து வந்தார். லாசர் மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் லாசர் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது மனைவி விக்டோரியாவும், அவரது மகன்களும் வந்து பார்வையிட்டனர். அப்போது வீட்டிற்குள் லாசர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவர்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து லாசர் எப்படி இறந்தார்? என்ன காரணம்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

