

நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஏராளமான செல்போன்கள் திருட்டு போனதாக தொடர்ந்து புகார் வந்தது. மேலும் செல்போன்கள் மூலம் பலர் மோசடியில் ஈடுபட்டு வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய தாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி காணாமல் போன 233 செல்போன்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.33 லட்சத்து 5,500 ஆகும்.
மேலும் செல்போன் மூலம் 6 பேரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட ரூ.26 லட்சத்து 73 ஆயிரத்தை குற்றவாளிகளின் வங்கி கணக்கில் இருந்து மீட்டனர்.
இதே போல் 23 பேரின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்து 252-ஐ குற்றவாளிகளின் வங்கி கணக்கில் முடக்கி வைத்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கமிஷனர் துரைக்குமார் கலந்து கொண்டு உரியவர்களிடம் 233 செல்போன்களையும், பண மோசடியில் பாதிக்கப்பட்ட 6 பேரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 26 லட்சத்து 73 ஆயிரத்திற்கான ஆவணத்தையும் வழங்கினார்.