search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    • கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் மணி மாட கோவில் என்று அழைக்கப்படுகின்ற நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்தக் கோயில் 108 வைணவ திவ்ய தோஷ கோயில்களை ஒன்றாகும்.

    ஆண்டுதோறும் நாங்கூர் பகுதியை சுற்றியுள்ள 11 பெருமாள் கோவில் இந்தக் கோவிலில் தான் எழுந்தருளி கருட சேவை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த பெருமாளை பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட ஞானிகள் வழிபட்டதாகவும், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பூதத்தா ழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் இந்த பெரு மாளை பற்றி பாசுரங்கள் இயற்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவிலின் ராஜகோபுரம், சன்னதிகள், சுற்றுச் சுவர் உள்ளிட்டவைகள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    நேற்று காலை 7வது கால யாக பூஜை நடந்தது. பின்னர் மகாபூர்ணா வதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய யாக குடங்கள் ஊர்வலமாக கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் ராஜகோபுரம், சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    அப்போது அங்கே கூடி இருந்த ஆயிரக்கண க்கான பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷமிட்டனர்.

    இதை அடுத்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்ட எஸ் பி மீனா, தனி துணை ஆட்சியர் கண்மணி , கோட்டாட்சியர் அர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), தாசில்தார் செந்தில்குமார், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×