டயர் வெடித்து விபத்து கார் மோதி வியாபாரி சாவு

அந்த வழியாக வந்த கார் ஒன்றின் டயர் திடீெரனெ்று வெடித்து வண்டி நிலைதடுமாறி சரவணன் மீது மோதியது.தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டயர் வெடித்து விபத்து கார் மோதி வியாபாரி சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது52).

இவர் பட்டுகூடு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சீராம்பட்டி பகுதிக்கு சென்றார். அப்போது அவர் சீராம்பட்டி அருகே தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்றின் டயர் திடீெரனெ்று வெடித்து வண்டி நிலைதடுமாறி சரவணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் உடனே அங்கு சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com