திருச்செந்தூர் நூலக கட்டிடத்தை புதுப்பிக்க நுகர்வோர் பேரவை கோரிக்கை

திருச்செந்தூர் நூலக கட்டிடத்தை புதுப்பித்து தரக்கோரி தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளருக்கு மனு கொடுத்துள்ளார்.
நகராட்சி ஆணையாளரிடம் நுகர்வோர் பேரவையினர் மனு கொடுத்த காட்சி.
நகராட்சி ஆணையாளரிடம் நுகர்வோர் பேரவையினர் மனு கொடுத்த காட்சி.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள சிதிலமடைந்த பழைய நூலக கட்டிடத்தை புதுப்பித்து புதிதாக நூலகம் அமைத்து தரக்கோரி தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளருக்கு மனு கொடுத்துள்ளனர்.   அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே சிதிலமடைந்த பழைய நூலகக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய நூலகக் கட்டிடம் அமைத்து தருமாறும், திருச்செந்தூர் ஆவுடையார் குளம் வடிகால் கால்வாய் வழியாக கழிவுநீர் செல்வதைத் தடுத்து வடிகாலை சுத்தம் செய்ய வேண்டும்.

நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகே சாலையில் அடிக்கடி  கழிவு நீர் தேங்கி பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதே போல் சன்னதி தெருவிலும் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. 

நிரந்தரமாக சுகாதார கேடு ஏற்படாத வகையில் கழிவு நீர் தேங்காமல் இருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com