உடன்குடி பகுதியில் சாலையை புதுப்பிக்க கிராம மக்கள் கோரிக்கை

உடன்குடி பகுதியில் சேதமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

உடன்குடி:

உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் சமத்துவ நகர் செல்லும் பிரிவு ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார்ரோடு இல்லாமல் கற்களாகவே இருக்கிறது.

பயணத்திற்கு பயன்படாத இந்த ரோட்டில் நடந்து கூட செல்ல முடியாது. இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனத்திலும் செல்ல முடியாத அளவுக்கு மிக மிக மோசமான நிலமையில் இந்த ரோடுஉள்ளது.

 மேலும் புகழ் பெற்ற தசரா திருவிழாவில் இந்த ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தபடும் அவ்வளவுமுக்கியம் பெற்ற சாலை ஆகும்.

இந்த ரோட்டைசம்பந்தப்பட்ட அதிகாரிகள்உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com