

தென்திருப்பேரை:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தென்திருப்பேரை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.
இதில் 1-வது வார்டு வேட்பாளரை எதிர்த்து போட்டி இல்லாததால் 1-வது வார்டு வேட்பாளர் கீதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள 11 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதில் 7-வது வார்டு மற்றும் 8-வது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்த், மணிமேகலை இருவரும் கணவன் மனைவி ஆவார்கள்.
அ.தி.மு.க. 2 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் 12 வார்டுகள் உள்ள தென்திருப்பேரை பேரூராட்சியில் ஆட்சியமைப்பது யார் என்ற இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.