ஆறுமுகநேரியில் வியாபாரியை மாமூல் கேட்டு தாக்கிய கும்பல்

ஆறுமுகநேரியில் மளிகை கடை நடத்தி வரும் வியாரியை அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் கும்பல் மாமூல் கேட்டு தாக்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ராஜ மன்னியபுரம் நடு தெருவை சேர்ந்தவர் சரவணன் (26). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வியாபாரம் செய்து கொண் டிருந்தார்.

அப்போது கத்தி, கட்டைபோன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்த பெருமாள் சாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ் செல்வகுமார் மற்றும் பாஸ்கர், மணிகண்டன், பிரித்திவிராஜ் ஆகியோர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். இதற்கு சரவணன் மறுத்துள்ளார்.

உடனே ஆத்திரமடைந்த அக்கும்பல் ரகளையில் இறங்கினர். இதில் சரவணன் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த மேஜை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.

சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று தெரிகிறது.அத்துடன் அங்கு கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.24 ஆயிரம்  மற்றும் 2 செல்போன்களை எடுத்துக் கொண்ட அக்கும்பல் சரவணனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜ் செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com