

ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு புறா பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் மதுரை - ஆறுமுகநேரி வரையிலான 160 கிலோ மீட்டர் புறா பந்தயம் நடைபெற்றது.
அடுத்த கட்டமாக திருச்சி சமத்துவபுரம் மைதானத்திலிருந்து ஆறுமுகநேரி வரையிலான பந்தயம் சனிக்கிழமை நடந்தது.
இதில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 7 பேரின் 55 புறாக்கள் பங்கேற்றன.
இதில் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரத்தை சேர்ந்த ஜோஸ் வினிஸ்டன் என்பவரின் புறா 300 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 42 வினாடியில் கடந்து வந்து முதலிடத்தை பிடித்தது.
காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த விமல் என்பவரின் புறாக்கள் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தன.
போட்டிக்கான ஏற்பாடுகளை பந்தய கிளப் தலைவர் நாராயணன், செயலாளர் ராஜ், பொருளாளர் பட்டு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.