பேய்க்குளம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

பேய்க்குளம் அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.
Published on

சாத்தான்குளம்:

பேய்க்குளம் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன், உச்சிமாகாளியம்மன், வலம்புரி விநாயகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேக விழா நடந்தது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் நடந்தது.

 திருச்செந்தூரில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் விநாயகர், ஸ்ரீ பத்ரகாளியம்மன், உச்சிமாகாளியம்மன், சுடலை ஆண்டவர் ஆகிய கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

பின்னர் பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

ஏற்பாடுகளை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com