

தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள சுவற்றில் பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் பெயிண்ட் மூலம் முககவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என வாசகம் எழுதப்பட்டுள்ளது.
பேரூராட்சியை தூய்மையாக வைத்து கொள்ள பொது மக்களுக்கு குப்பைகளை தெருவில் கொட்டாதீர்கள், குப்பை களை தரம் பிரித்து வீட்டிற்கு வரும் தள்ளுவண்டியில் கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும் பொதுமக்களின் குறைகளின் உடனடி தீர்வுக்கு பேரூராட்சி செயல் அலுவலரை 78240 58183 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் செயல் அலுவலர் ரமேஷ் கூறியுள்ளார்.