பூச்சிக்காடு - நாலுமாவடி சாலையை புதுப்பிக்க கோரிக்கை

திருச்செந்தூர் பூச்சிக்காடு கிராமத்தில் இருந்து நாலுமாவடி செல்லும் சாலையில் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்.
சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்.
Published on

உடன்குடி:

திருச்செந்தூர் காயாமொழி அருகே உள்ள பூச்சிக்காடு கிராமத்தில் இருந்து நாலுமாவடி செல்லும் சாலை முக்கியமான போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.

தென் பகுதி மக்கள்குறுக்கு வழியில் அருஞ்சுனை காத்த அய்யனார்கோவில், வன திருப்பதி, நாலுமாவடி, குரும்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அதிகமாக பயன்படுத்துவார்கள்.

 இந்த சாலையில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கரம் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக சிதிலமடைந்து உள்ளது.

பயணத்திற்கு பயன்படாத சாலையாக மாறிவிட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை முழுவதுமாக புதுபித்து போட வேண்டும்  என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com