

தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தேங்காய் நார் கழிவுகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல ஆயிரம் டன் தேங்காய் நார் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த ஏற்றுமதி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகம் காரண மாக தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
எனினும் ஏற்றுமதி நிறுவன வளாகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் டன் தேங்காய் நார் கழிவுகள் எரிந்து நாசமானதாக கூறப் படுகிறது.
இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரி கிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.