

தூத்துக்குடி:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் விடுதி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
கலைத்திருவிழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், சாத்தான்குளம் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் உள்ளடங்கிய தேர்வு குழுவின் முன்னிலையில் நடைபெற்றது.
போட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.