கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு பூஜை நடந்த போது எடுத்த படம்.
சிறப்பு பூஜை நடந்த போது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். 

இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடை வெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். 

பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com