search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் தென்புற இணைப்பு சாலை அமைக்கும் பணி  - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
    X

    பணிகள் நடைபெறும் இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் தென்புற இணைப்பு சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

    • 10 ஆண்டுகளாக தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.
    • அப்பணிகள் விரைவாக நடைபெற்று போக்கு வரத்து நெரிசல் குறைக்க ப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி :

    தூத்துக்குடி 3-ம் கேட் ெரயில்வே மேம்பாலம் தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வில்லை. அப்பகுயில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ரெயில்வே மேம்பாலம்

    தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலமானது கடந்த 2010-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அன்றைய துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்றைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அன்றைய தி.மு.க மாவட்ட செயலாளர் என். பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

    ஆனால் 10 ஆண்டுகளாக தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆன பின்னர் நான், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரு டன் கலந்து ஆலோசித்து இணைப்பு சாலைகள் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டேன்.

    போக்குவரத்து நெரிசல்

    மாவட்ட நிர்வாகமும் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து, தற்போது தென் பகுதியில், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு தமிழக அரசின் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு தற்போது சாலை அமைக்கும் பணிகளும், மேலும் அப்பகுதி யில் உள்ள மின் கம்ப ங்கள் மாற்றி யமைக்கப் பட்டு, புதிய தார் சாலைகள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. அப்பணிகள் விரைவாக நடைபெற்று போக்கு வரத்து நெரிசல் குறைக்க ப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×