ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, மல்லிகா, பரமேஸ்வரி, ரகுராமன், தாமஸ், பூல், சஜீதா, காந்திமதி, நசரேன் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர் தானி ராஜ்குமார் உட்பட 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொேரானா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், ராஜா, கிறிஸ்டோபர் தாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, மாலாதேவி, ஒன்றிய பொறியாளர் வெள்ளைப் பாண்டியன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிதம்பரராஜ், ஜெயச்சந்திரா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com