அரவைக்காக 1000 டன் நெல் அனுப்பி வைப்பு

திருவள்ளூருக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

நன்னிலம்:

பேரளம் ரெயில் நிலையத்திலிருந்து திருவள்ளூருக்கு 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. 

திருத்துறைப்பூண்டி மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் உள்ள சாதாரண ரக நெல்மூட்டைகளை லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டது. 

தொழிலாளர்கள் மூலம் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து சரக்கு ரெயில் திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com