மன்னார்குடியில் காட்சிப்படுத்தபட்ட குடியரசு தின அலங்கார ஊர்திகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காட்சிப்படுத்தப்பட்ட குடியரசு தின அலங்கார ஊர்திகளில் நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
அலங்கார ஊர்திகளை மலர் தூவி வரவேற்ற கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.
அலங்கார ஊர்திகளை மலர் தூவி வரவேற்ற கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக் குட்பட்ட தேரடி திடலில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள “விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பினை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட 

2 அலங்கார ஊர்திகளை மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

அலங்கார ஊர்திகள் மன்னார்குடி வட்டம், வடுவூர் கிராமத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

அலங்கார ஊர்திகளில் ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுந்த செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி.சுப்ரமணிய சிவா, தியாகி.சேலம். விஜயராகவாச் சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகளும்.

மற்றொரு அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்த்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி.வ.வே.சு.அய்யர், கண்ணியமிகு காயித்தே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் 

பொருளாதாரப் பேராசிரியாகவும் சிறைத்தண்டணை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாக சீலர் கக்கன் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகள் இடம் பெற்றுள்ளன.

2 அலங்கார ஊர்திகளும் நாள் முழுவதும் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட, தேரடி திடலில் காட்சிப்படுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் கலைப்பண் பாட்டுத்துறையின் சார்பில் பரதநாட்டியம், நாதஸ்வர இசை, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுபுற 

கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மாணவர்களுக்கு அலங்கார ஊர்தியில் இடம்பெற்றுள்ள தேச தலைவர்கள் தொடர்பாக பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

நிகழ்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், செய்தித்துறை தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர் கிரிராஜன், வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com