26-ந் தேதி தர்ணா போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 26-ந் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

திருவாரூர்,:

நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்கு ழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர்மகேஷ்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் லெட்சுமிநாராயணன், மாநில பொருளாளர் வெங்கடேசன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில், அகவிலை ப்படியை உடனே வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஈட்டியவிடுப்பு ஊதியத்தை பணப்பலனாக வழங்க வேண்டும், முன்னாள் மாநில தலைவர் சுப்பிர மணியத்தின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து அவருக்கானஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைளை வலியுறுத்தி வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர தர்ணாபோரா ட்டத்திலும், அடுத்தமாதம் (ஜூன்) 16- ந்தேதி சென்னை யில் உண்ணாவிரதம் போராட்டத்திலும் ஈடுபடு வது, உண்ணாவிரதம் தொட ர்பாக வருகிற 6-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்டபல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. 

இதில் அனைத்து மாவட்ட ங்களில் இருந்தும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சாந்தகுமாரி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாநில பொருளாளர்வெங்கடேசன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com