எண்கண் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் தைப்பூச தேரோட்டம்

திருவாரூர் அருகே எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூச தேரோட்ட விழா
தைப்பூச தேரோட்ட விழா
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முதல் முருகன் கோவில்களில் சிறப்புமிக்கதாக எண்கண் சுப்பிரமணியசாமி கோவில் திகழ்ந்து வருகிறது. 

இந்த கோவிலில் நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. 

ஆனாலும் இக்கோயிலின் சிறப்பு காரணமாக பக்தர்கள் ஏற்பாட்டின் பேரில் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு வீதிகளிலும் சுற்றி வந்த தேர் மீண்டும் கீழவீதியில் உள்ள நிலையடிக்கு வந்து சேர்ந்தது. 

தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு வீதிகளிலும் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து முருகனை வழிபட்டனர். இன்று தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com