விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு

பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் போலீசார் விசாரணை
விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
Published on

ஆரணி:

ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48), விவசாயி. இவரது மனைவி ராணிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார்.

இதனால் தாமோதரன் விவசாய நிலத்தை கவினித்துக்கொண்டு வீட்டிற்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். ராணிக்கு சிகிச்சை முடித்து சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட் 16 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தாமோதரன் ஆரணி தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில் நான் ஊரில் இல்லாததால் கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com