அரசு பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது

30 பேர் படுகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை படத்தில் காணலாம்.
மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை படத்தில் காணலாம்.
Published on

திருவண்ணாமலை:

சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி இன்று அதிகாலை 4.45 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

அத்தியந்தல் அருகே வரும்போது பஸ் டிரைவரின் கட்டு ப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

அப்போது தடுப்பு சுவரை இடித்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

இதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் கண்டக்டர் ஜனார்த்தனனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ஒரு பயணியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com