search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரணி தீபம், மகா தீபத்திற்கான கட்டண அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடு
    X

    பரணி தீபம், மகா தீபத்திற்கான கட்டண அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடு

    • ஒரு ஆதார் அட்டைக்கு ஒருகட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் https:// annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணையதள வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.

    கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒருகட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி. எண் குறுஞ்செய்தியாக பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.

    கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்ட ணச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன் லைன் மூலம் டிக்கெட் பதிவி ம் றக்கம் செய்யப்பட்டு பரணி ள் தீபம் தரிசனத்திற்கு வருகை 7 தரும் பக்தர்கள் 26-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் (திட்டி வாயில்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இணையதளம் வழியாக கட்டணச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப் பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×