search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிப்பு
    X

    புதுப்பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிப்பு

    • மனுக்களை கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
    • அத்தியாவசிய பணிகளும் முடங்கும் சூழல் நிலவி வருகிறது

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதி க்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. புதுப்பா ளையம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் சுமார் 5 ஆயரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக புதுப்பாளையம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் இல்லாததால் போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

    புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கூறவும் கோரிக்கை மனுக்களை செயல் அலுவ லரிடம் நேரில் கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் குடிநீர், கழிவு நீர் கால்வாய் தொடர்பான புகார்கள் கொசு மருந்து அடிக்காததால் கொசு மருந்து கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பல்வேறு குறைகளை செயல் அலுவலரிடம் தெரிவிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களை செயல்படுத்துவதில் சுணக்கம், பேரூராட்சி சார்பில் செயல்படுத்தபடும் அத்தியாவசிய பணிகளும் முடங்கும் சூழல் நிலவி வருகிறது.

    வாரத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் செயல் அலுவலர் பேரூராட்சிக்கு வந்து சென்று விடுவதால் பொதுமக்கள் செயல் அலுவலரை நேரில் சந்திக்க முடியவில்லை.

    எனவே புதுப்பாளையம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×