என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
- ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






