பள்ளி மாணவி, இளம்பெண் மாயம்

வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை போலீசார் தேடி வருகின்றனர்
பள்ளி மாணவி, இளம்பெண் மாயம்
Published on

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி. இவருடைய 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மாணவி அதிகாலை மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர்.

அவர் கிடைக்காததால் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தனர். இதேபோல் தூசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தூசி போலீசில் புகார் அளித்தனர். இந்த இரு சம்பவங்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி, இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com