search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் ரூ.2.24 கோடி உண்டியல் காணிக்கை
    X

    திருவண்ணாமலை கோவிலில் ரூ.2.24 கோடி உண்டியல் காணிக்கை

    • 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி கிடைத்தது
    • பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் உள்ளிட்ட கோவில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.

    ஐப்பசி மாத பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று காலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் காணிக்கை உண்டியல்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224, 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×