நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்பனை செய்த பெண் கைது

நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்&இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுப்பேட்டை சந்தைமேடு பகுதியை சேர்ந்த மணி என்பவரது மனைவி ராதா (வயது 59) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மறைமுகமாக 125 லிட்டர் கள்ள சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது போலீசார் வருவது கண்டு தப்ப ஓட முயன்றார். ராதாவை  போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com