திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் உறியடி திருவிழா

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது.2 ஆண்டுகளுக்கு பிறகு உறியடி திருவிழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது.
திருக்குறுங்குடியில் உறியடி திருவிழா நடந்தபோது எடுத்தபடம்
திருக்குறுங்குடியில் உறியடி திருவிழா நடந்தபோது எடுத்தபடம்
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது.

இந்த கோவில் உறியடி திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு உறியடி திருவிழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது.

இதையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் கோவிலில் அருகில் ஓடும் நம்பியாற்றில் புனித நீராடினர். இதனை அடுத்து நம்பிசுவாமி–களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

மாலையில் முக்கிய நிகழ்ச்சியான உறியடி உற்சவம் நடந்தது. பக்தர்கள் உறியடித்தனர். இதனை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். அதனை–தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் திருமலை நம்பி எழுந்தருளி உலா வந்தார்.

உறியடி திருவிழா ஏற்பாடுகளை கண்ணன் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். கோவிலில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டதால், வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினரும், திருக்குறுங்குடி போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com