தெர்மா கோலுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம் - செல்லூர் ராஜு

செல்லூர் ராஜுக்கு தெர்மாகோல் அடைமொழி ஆகிவிட்டது. என்னையே தெர்மாகோல் ஆக்கி விட்டார்கள் என்றார்.
தெர்மா கோலுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம் - செல்லூர் ராஜு
Published on

சினிமா புகழ், டி.வி. புகழ் என்று சில பிரபலங்களுக்குஅடைமொழி ஒட்டிக்கொண்டு இருப்பது போல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு தெர்மாகோல் அடைமொழி ஆகிவிட்டது. அவர் விட்ட தெர்மாகோல் தண்ணீர் ஆவியாவதை தடுத்ததோ? தடுக்க வில்லையோ? அவரது பெயரோடு அது ஒட்டிக்கொண்டதை மட்டும் தவிர்க்க முடிய வில்லை.

மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் செல்லூர் ராஜு பேசும்போது, நான் மதுரைக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்டால் என்னை தெர்மா கோலோடு இணைத்து பேசி திசை திருப்புகிறார்கள். தெர்மா கோலுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்? மாவட்டத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தெர்மா கோலை விட்டார்கள். நானும் சென்றிருந்தேன் அவ்வளவு தானே?!. அதற்காக என்னையே தெர்மாகோல் ஆக்கி விட்டார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com