பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் பயங்கர வெடி சத்தம்

இந்த பயங்கர சத்தம் வேலூர், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை, கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதி முழுவதும், அதிக சத்தமும், அதிர்வும் உணரப்பட்டன.ஜன்னல்கள், கண்ணாடிகள் அதிர்ந்து, கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் பயங்கர வெடி சத்தம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் ஏற்பட்டதால் பரமத்திவேலூர் பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அச்சத்தில், மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயங்கர சத்தம் வேலூர், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை, கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதி முழுவதும், அதிக சத்தமும், அதிர்வும் உணரப்பட்டன. மேலும் ஜன்னல்கள், கண்ணாடிகள் அதிர்ந்து, கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்ட போது அதிவேக ஜெட் விமானம் தாழ்வாக பறந்து செல்லும் போது வழக்கமாக, இதுபோன்ற வெடி சத்தம் அடிக்கடி கேட்பதாக தெரிவித்தனர். இதனால் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com