search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி : அரசு மீன்பண்ணையில் கலெக்டர் ஆய்வு
    X

    பெரியகுளம் அருகே ஏ.புதுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அலங்கார மீன்வளர்ப்பு பண்ணை செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி : அரசு மீன்பண்ணையில் கலெக்டர் ஆய்வு

    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்ப ட்டுள்ள அரசு மீன்பண்ணை யின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கிராவல் வெட்டி எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமை வழங்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து விதிமீறல்கள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு வடிநில கோட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்ப ட்டுள்ள அரசு மீன்பண்ணை யின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    மீன்குஞ்சு பொறிப்பக பணி, இந்திய பெருரக கெண்டைமீன் வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக ஏ.புதுப்பட்டி கிராமத்தில் சி.எஸ்.எஸ் நீலபுரட்சி திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் திட்டமதிப்பீட்டில் அமைக்க ப்பட்ட ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு பண்ணையின் செயல்பாடு கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    சில்வார்பட்டியில் செயல்பட்டு வரும் விற்பனை முனைய எந்தி ரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வினியோகம் செய்யப்பட்ட பொருட்கள், மீதமுள்ள பொருட்களின் இருப்பு, தரம், அளவு குறித்து ஆய்வு செய்தார். ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் உதவி இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் உடைக்கல் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமை வழங்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து விதிமீறல்கள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உடைகல் மற்றும் கிராவல்களை வழங்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×